கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா?
ஆம். தற்போது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் மிக்கவை. மேலும், சிடிசி ஒரு தடுப்பூசியை விட மற்றொன்றைப் பரிந்துரைப்பதில்லை. கூடிய விரைவில் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதே மிக முக்கியமான முடிவாகும். இந்தப் பெருந்தொற்றைத் தடுக்க பரவலான தடுப்பூசிப் பணி ஒரு முக்கியக் கருவியாகும்.
கோவிட்-19 தடுப்பூசி உங்கள் உடலில் என்ன செய்கிறது?
கோவிட்-19 தடுப்பூசிகள், கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸை எவ்வாறு அடையாளம் கண்டு எதிர்த்துப் போராடுவது என்பதை நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்குப் பயிற்றுவிக்கின்றன. சில சமயங்களில், இந்தச் செயல்முறை காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும்.
கோவிட்-19 தடுப்பூசி எனது டி.என்.ஏ-வை மாற்றுமா?
இல்லை. கோவிட்-19 தடுப்பூசிகள் உங்கள் டி.என்.ஏ-வை எந்த வகையிலும் மாற்றுவதில்லை அல்லது அதனுடன் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.என்.ஏ மற்றும் வைரல் வெக்டர் ஆகிய இரண்டு வகை கோவிட்-19 தடுப்பூசிகளும், கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்கத் தொடங்குவதற்காக, நமது செல்களுக்கு வழிமுறைகளை (மரபணுப் பொருளை) வழங்குகின்றன. இருப்பினும், அந்தப் பொருள் ஒருபோதும் செல்லின் உட்கருவிற்குள் நுழைவதில்லை; நமது டி.என்.ஏ அங்குதான் வைக்கப்பட்டுள்ளது.
பதிவிட்ட நேரம்: ஆகஸ்ட் 12, 2021